தமிழத்தேசியத்திற்கான ஆதரவு தொடர்பில் சவால் விடுத்த பிள்ளையானின் கோட்டை பேரணிக்காரர்களால் அதிர்ந்தது!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த்தேசியவாதிகள் இல்லை என்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பேரணி தோற்கடிக்கப்படும் என்றும் கங்கணம் கட்டிக்கொண்டு மேடைகளில் முழங்கிய பிள்ளையானின் கோட்டையான வாகரை பிரதேசம், மக்களின் 'எழுச்சியால் அதிர்ந்தது.
வடக்கில் இருந்த கிழக்கு நோக்கிய பேரணி தமிழரின், தமிழ்த்தேசியத்தின் உரிமைக்காக அனைத்து மக்களும் ஒன்று திரண்டு, பேரணிக்கு பெரும் ஆதரவை வழங்கி பட்டாசு வெடித்து பெரும் எழுச்சியுடன் இடம்பெற்று வருகின்றது.
பிள்ளையானின் சவால் பொய்யானது
இவ்வாறான நிலையில், பேரணி மட்டக்களப்பை வந்தடையும் போது பெரும் தோல்வியை அடையும் என்று பிள்ளையான் விடுத்த சவாலுக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள்.
வெருகலில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் பேரணிக்கு ஆதரவளித்து மக்கள், வீதியின் இரு மருங்குகளிலும் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்க விட்டு, வெடிகளைக் கொளுத்தியும் நீராகாரங்கள் வழங்கியும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
அச்சுறுத்தலையும் மீறி தொடரும்
அத்துடன் பேரணியிலும் கலந்து கொண்டுள்ளனர். பேரணியில் கட்சி வேறுபாடுகள் மத வேறுபாடுகளுக்கு அப்பால் இந்து மத, கிறிஸ்தவ மத தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பல பிரதிநிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் அச்சுற்றுதலும் ஏற்பட்டுள்ள நிலையில் வெருகல் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி ஆரம்பமாகி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த பேரணியையும் ஆதரவாளர்களையும் இராணுவம் மற்றம் புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.











தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்