இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் : அமெரிக்க ஜனாதிபதி சொன்ன புதிய தகவல்(வைரலாகும் காணொளி)
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உடனடி போர் நிறுத்தத்திற்கு என்ன காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள புதிய தகவல் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு போர் நடைபெற்றது.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் ஒபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பதிலடி கொடுத்தது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு
இதனையடுத்து இரண்டு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலை மேற்கொண்டு வந்ததால் பதற்றம் அதிகரித்தது.
#WATCH | US President Donald Trump says, "...I'm very proud to let you know that the leadership of Indian and Pakistan was unwavering and powerful, but unwavering in both cases - they really were from the standpoint of having the strength and the wisdom and fortitude to fully… pic.twitter.com/rFbznHMJDF
— ANI (@ANI) May 12, 2025
பின்னர் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டு போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று (12) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் போர் நிறுத்தத்திற்கான காரணம் குறித்து பேசி உள்ளார்.
இனி அமெரிக்கா வர்த்தகம் செய்யாது
அதாவது அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் போரை நிறுத்தாவிடில் இனி அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என்று கூறியதால் தான் இருவரும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பான காணொளிசமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#WATCH | On India-Pakistan understanding, US President Donald Trump says, "...We stopped a nuclear conflict. I think it could have been a bad nuclear war. Millions of people could have been killed. I also want to thank VP JD Vance and Secretary of State, Marco Rubio, for their… pic.twitter.com/9upYIqKzd1
— ANI (@ANI) May 12, 2025
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
