தமிழர்தாயக சுயநிர்ணயத்தை வென்றெடுப்போம் எனும் முழக்கத்துடன் திருமலை நகர் நோக்கி பேரணி!
தமிழர் தாயகத்தை மீட்போம், சுயநிர்ணயத்தை காப்போம் எனும் கோங்களுடன் கடந்த 4ஆம் திகதி சிறிலங்காவின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி ஆரம்பமான உரிமைக்கான பேரணி தற்போது திருகோணமலையை சென்றடைந்துள்ளது.
திருகோணமலையை சென்றடைந்த பேரணிக்கு அங்கு கூடியிருந்த தமிழ் உணர்வாளர்கள் உற்சாக வரவேற்பளித்து வரவேற்றதோடு, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் எழுச்சிப் பேரணியுடன் இணைந்துகொண்டுள்ளனர்.
திருகோணமலை நகர் நோக்கி நகர்வு
சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினத்தை தமிழரின் கருப்பு தினமாக பிரகடனப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் பேரணி தற்போது, கிழக்கு பல்கலைக்கழக வளாக மாணவர்களின் இணைவுடன் திருமலை நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.




















தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்