தாயகத் தலைநகரிலிருந்து வீரம் விளை நிலம் நோக்கி நகரும் உணர்வெழுச்சிப் பேரணி!
சிறிலங்காவின் சுதந்திர தின நாளை கரி நாளாக பிரகடனப்படுத்தி கடந்த நான்காம் திகதி வடகிழக்கு இணைந்த பல்கலைக்கழக மாணவர்களினால் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்ட தமிழர் எழுச்சி பேரணி தற்போது திருகோணமலை வெருகல் பகுதியில் இருந்து வீரம் விளை நிலமான மட்டக்களப்பு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.
வடகிழக்கு பிரதேசத்தில் உள்ள தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் வடகிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகத்தினை வலியுறுத்தி இந்த எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பல்வேறு தரப்பினரின் இணைவு
பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புக்கள் என பல்வேறு தரப்பினரும் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழர் தாயகத்தை மீட்போம், சுயநிர்ணயத்தை காப்போம் எனும் கோசங்களுடன் நேற்றைய தினம் திருகோணமலையை சென்றடைந்த பேரணிக்கு அங்கு கூடியிருந்த தமிழ் உணர்வாளர்கள் உற்சாக வரவேற்பளித்து வரவேற்றதோடு, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் எழுச்சிப் பேரணியுடன் இணைந்துகொண்டனர்.
பிரதேசவாரியாக படையெடுக்கும் மக்கள்
இந்தப் போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து செல்வோர் மு.ப.10, மணிக்கு கதிரவெளியில் இணைந்து கொள்வார்கள். அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் இருந்து வருகை தரும் மற்றுமொரு பேரணி மு.ப. 11 மணியளவில் பெரியகல்லாற்றை தாண்டி பி.ப. 1.30, மணிக்கு களுதாவளை பிள்ளையார் கோயில் சந்தியில் சந்திப்பதோடு, அங்கு மேலும் பலர் இணைந்து கொண்டு அங்கிருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பேரணி சென்று பிற்பகல் 3 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.














தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்