கவிழ்ந்தது படகு காணாமற் போனார் மீனவர்
வஸ்கடுவ கடலில் ஒரு நாள் மீன்பிடி படகு நேற்று (8) காலை விபத்திற்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், இருவர் உயிர்பிழைத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு, விலேகொட, ரோஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் நிஷான் சில்வா என்ற 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே காணாமல் போனவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இயந்திரத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறினால்
காணாமல் போனவருடன் மேலும் இருவர் காலை 6.30 மணியளவில் லிட்டில் வஸ்கடுவ பகுதியில் இருந்து மீன்பிடிக்க ஜே.எஸ். மரைன் என்ற 1380 கே எல் ரி என்ற ஒரு நாள் மீன்பிடிக் படகில் சென்றுள்ளனர். இதன்போது இயந்திரத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறினால் படகு கவிழ்ந்ததுடன், படகில் தொங்கிய நிலையில் மூவரும் நீரில் மூழ்கிய நிலையில் இருவர் நீந்தி கரைசேர்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிர் பிழைத்த இருவரும் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
கடலில் கண்காணிப்பு
களுத்துறை வடக்கு காவல்துறையினரும் பிரதேச மக்களும் இணைந்து குறித்த பகுதி கடலில் இரண்டு மீன்பிடி படகுகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
