பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க முனைந்த குடியேறிகளின் படகு விபத்து..! நால்வர் பலி - 43 பேர் மீட்பு
கடும்குளிருக்கு மத்தியில் ஆங்கிலக்கால்வாய் கடற்பரப்பை கடந்து பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க முனைந்த குடியேறிகளின் படகு ஒன்று சேதமடைந்து கவிழ்ந்ததில் நான்குபேர் பலியாகியுள்ளனர். இதுவரை 43 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆட்கடத்தல்காரர்களின் கொடுமையான வணிக நடவடிக்கையில் இன்று அதிகாலை ஆங்கிலக்கால்வாயில் இந்த புதிய துன்பியல் இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க முயற்சி
கடும்குளிருக்கு மத்தியில் சுமார் 50 க்கு மேற்பட்டவர்களுடன் பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க முனைந்த குடியேறிகளின் படகு ஒன்று இன்று அதிகாலை 3 மணியளவில் கவிழ்ந்திருந்தது.
இந்த விபத்தையடுத்து இன்று காலை பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கடறபடை கலங்களும் நோயாளர் காவு உலங்குவானூர்திகளும் குறித்த படகு கவிழ்ந்த இடத்த்துக்கு அருகில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன.
குறித்த டிங்கி கடகு கவிழப்போவது குறித்த அபாயச் செய்திகள் அனுப்பட்ட பின்னர் இந்த துன்பியல் இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து அந்த பகுதிக்கு அருகில் சென்ற வணிகப்படகு ஒன்று ,கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 30 பேரை மீட்டிருந்தது.
அதன்பின்னர் இடம்பெற்ற மீட்புபணிகளில் மொத்தமாக 43 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த மீட்புப் பணிகளில் மீன்பிடிக்கலங்களும் ஈடுபட்டிருந்தன. எனினும் இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சட்டவிரோத குடியேற்றம்
சட்டவிரோத குடியேற்றத்தை சமாளிக்க விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் நேற்று அறிவித்த நிலையில் இன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்லும் இந்தச் சம்பவம் இன்று பகல் எதிரொலித்திருந்தது.
4 பேர் பலியானதை உறுதிப்படுத்திய உள்துறை அமைச்சர் சுயெல்லா பிராவர்மேன், மனிதர்களை சரக்குகளாக கையாளும் தீய குற்றவாளிகளே இந்த துன்பியலுக்கு காரணம் எனவும் குற்றஞ்சாட்டினார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா
