‘கூகுள் க்ரோம்’ : வாங்கத் தயாராகும் தமிழர்
கூகுள் க்ரோமை(google chrome) வாங்குவதற்காக சென்னை வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொழில்நுட்ப உலகில் தனக்கென தனியிடத்தை பல ஆண்டுகளாகத் தக்கவைத்து வருகிறது, கூகுள் நிறுவனம். கூகுள் ப்ரவுசர் (தேடுபொறி), வரைபடம், மின்னஞ்சல் என பலவற்றையும் கூகுள் வழங்கி வருகிறது. 2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கூகுள் ப்ரவுசர் உருவாக்கத்தில் சுந்தர் பிச்சை என்னும் தமிழருக்கும் முக்கிய பங்களிப்பு உண்டு.
கூகுள் ப்ரவுசருக்காக வழங்க முன்வந்த தொகை
கூகுளின் சில தயாரிப்புகளை விற்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. இதனிடையே, கூகுள் ப்ரவுசரை விற்க வேண்டியிருந்தால், தங்களிடம் வழங்கலாம் என்று சென்னை வம்சாவளியான அரவிந்த் ஸ்ரீனிவாஸ்(aravind-srinivas) என்பவர் கூறியுள்ளார்.
மேலும், கூகுள் ப்ரவுசருக்காக அவர் 34.5 பில்லியன் டொலர் (சுமார் ரூ. 3.02 லட்சம் கோடி) வழங்க முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனம்
சென்னையில் பிறந்து, ஐஐடி மெட்ராஸ் உள்பட அமெரிக்காவிலும் பயின்ற அரவிந்த், 2022 ஆம் ஆண்டில் பெர்ப்லெக்ஸ்டி (Perplexity AI) என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கினார்.
கடந்தாண்டு மத்தியில் ஒரு பில்லியன் டொலராக இருந்த நிறுவனத்தின் மதிப்பு, ஒரே வருடத்தில் 14 பில்லியன் டாலராக உயர்ந்தது. தொடர்ந்து, ஜூலை 2025 கணக்கின்படி, 18 பில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
