யாழில் தவிர்க்கப்பட்ட பாரிய அசம்பாவிதம் (படங்கள்)
Jaffna
By Vanan
யாழ் - நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் வந்த சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்து பயணிகள் கடலில் அந்தரித்த நிலையில், மீனவர்களின் உதவியுடன் கரை சேர்க்கப்பட்டனர்.
இன்று காலை நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிப் பயணித்த சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்தமையால் நெடுந்தீவுக்கான போக்குவரத்து தடைப்பட்டது.
சாதுரியமான செயல்
சுமார் 70 பயணிகளுடன் பயணித்த சமுத்திரதேவா, மலையடிப் பகுதியை அண்மித்தபோது அதன் சுக்கான் உடைந்துள்ளது.
அந்தப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் உதவியுடன், படகு நடத்துனர்கள் சாதுரியமாகச் செயற்பட்டு பயணிகளைப் பாதுகாப்பாக குறிகாட்டுவான் துறைமுகத்துக்குக் கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.
இதன்காரணமாக பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி