விபத்தில் சிக்கிய பயணிகள் படகு - 145 பேர் பலி
Accident
Death
By Kiruththikan
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) 200 பயணிகளுடன் சென்ற மோட்டார் படகு லுலோங்கா ஆற்றில் மூழ்கியுள்ளது.
இந்த விபத்தில் 145 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் 55 பேர் உயிர் தப்பியுள்ளனர்.
லுலோங்கா ஆற்றில் மோட்டார் படகு அதிக சுமையுடன் பயணித்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எடை
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பசன்குசு நகருக்கு அருகே பயணிகள் தங்கள் பொருட்கள் மற்றும் கால்நடைகளுடன் மோட்டார் படகில் காங்கோ குடியரசுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
படகில் பயணிகள், பொருட்கள் மற்றும் கால்நடைகள் அதிகளவில் ஏற்றப்பட்டதால், படகு அதிக எடை காரணமாக ஆற்றில் மூழ்கியது.
காங்கோவில் சாலைகள் இல்லாததால் மக்கள் படகுகளில் பயணம் செய்கின்றனர் இதனால் அடிக்கடி படகு விபத்துகள் நடக்கின்றன என தெரிவிக்கப்படுள்ளது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 21 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
6 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்