இந்திய தலையீட்டால் முடிவை மாற்றுமா இலங்கை?
இலங்கை அரசினால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்துப் படகுகளையும் மீட்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ (Vaiko) வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாகக்கூறி இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் ஏலமிடப்படவுள்ளதாக வெளியான அறிவிப்புக்கு, தனது கண்டனதையும் வெளியிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 105 படகுகளை, எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை 5 இடங்களில் ஏலமிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அறிக்கையொன்றின் ஊடாக கண்டனத்தை வெளியிட்டுள்ள வைகோ, உடனடியாக இந்திய மத்திய அரசு இதில் தலையிட்டு மீன்பிடிப் படகுகள் ஏலமிடப்படுவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
