வடமராட்சியில் காணாமல் போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்பு
Jaffna
Fishing
Sri Lanka
Sri Lanka Navy
Sri Lanka Fisherman
By Sathangani
யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் கடற்தொழிலுக்கு சென்று காணாமல் போன கடற்றொழிலாளர், நேற்று (17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் கடந்த சனிக்கிழமை (16) அன்று கடற்றொழில் நடவடிக்கைக்காக தெப்பம் மூலம் கடலுக்கு சென்றவர் காணாமல் போயிருந்தார்.
இந்த நிலையில் இரண்டு நாட்களாக கடற்படையினர், கடற்றொழிலாளர்களின் உதவியுடன் அவரை தேடி வந்தனர்.
குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
இதேவேளை அவர் பயணித்த தெப்பம் கரையொதுங்கிய நிலையில் அவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி