வவுனியாவில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்! தொடரும் விசாரணை
Vavuniya
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
வவுனியா ஈரற்பெரியகுளம் மயானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்தப்பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக ஈரற்பெரியகுளம் காவல்துறையினருக்கு இன்று(24) காலை தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அந்தபகுதிக்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சுமார் 40-45 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரது உடலில் சிறுபகுதி தீயினால் எரிந்துள்ளதாக கூறப்படுகின்ற இது தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி