கனேடிய விமான நிலையத்திற்கு அருகில் இலங்கைத் தமிழர் சடலமாக மீட்பு
இலங்கைத் தமிழர் சடலமாக மீட்பு
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் Vancouver சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட சடலம் இலங்கைத் தமிழருடையது என அந்நாட்டு காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 64 வயதானவர் எனவும் இவர் இலங்கை பண்டாரவளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாத ஆரம்பத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட இவர் சடலமாக மீட்கப்பட்டார் என ரோயல் கனேடியன் மவுன்ட் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதிக போதையில் இருந்தார்
கடந்த மாதம் 9ஆம் திகதி காணாமல் போனதாக முறையிடப்பட்டபோது அவர் அதிக போதையில் இருந்ததாக காவல்துறையினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் காவல்துறையினர் தகவல் வெளியிடவில்லை என்பதுடன், அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என தெரிவித்தனர்.
இவர் கடந்த மாதம் 9ஆம் திகதி காலமானதாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.