பேருந்தில் குண்டு வைத்த தமிழருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
Sri Lankan Tamils
Sri Lanka
Sri Lanka Magistrate Court
Crime
Bomb Blast
By Sumithiran
பேருந்தில் குண்டு வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்டார் என தெரிவிக்கப்படும் தமிழர் ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) இந்த தண்டனையை விதித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு கொழும்பு ஹோர்டன் சுற்றுவட்டத்தில் பயணிகள் பேருந்தில் வெடிகுண்டு வைத்து கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் நாகலிங்கம் மதனசேகரன் என்ற பிரதிவாதிக்கு கடூழிய தண்டனையுடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திறந்த பிடியாணை
இதே குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தற்போது நீதிமன்றத்தை புறக்கணித்து வரும் மற்றுமொரு பிரதிவாதியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு அறிவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி