ஐபிசி தமிழ் சாதனையாளர் விருது பெற்ற ஏ.ரகுநாதன் அவர்களின் நூல் அறிமுக விழா
தமிழ் மக்கள் நெஞ்சம் நிறைந்த IBC-தமிழ் பிரான்ஸ் நாட்டில் 2016ம் ஆண்டு 'பலே து ஸ்போ' பிரமாண்டமான மண்டபத்தில் நடத்திய 'IBC- தமிழா' நிகழ்ச்சியில்வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ‘நிர்மலா’ புகழ் ஏ.ரகுநாதன் தனது ஆறுதசாப்த கால கலைவாழ்வில் சந்தித்த கலைஞர்கள் பற்றிய நினைவுக்குறிப்பை பரிஸில் இருந்துவெளிவந்த ‘தமிழன்’ பத்திரிகையில் தொடராக எழுதிவந்தார்.
அதனை நூலாக வெளியிடவேண்டும் என்ற விருப்பத்தை கலைஞர் ஏ.ரகுநாதன் ‘தமிழன்’ பத்திரிகை ஆசிரியர் எஸ்.கே.காசிலிங்கம் அவர்களிடம் தெரிவித்திருந்தார்.
கோவிட் பெருந்தொற்று காவுகொண்டவர்களில் கலைஞர் ஏ.ரகுநாதனையும் ஈழத்துக் கலையுலகம் இழந்தது.
கலைஞர் ஏ.ரகுநாதனுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய அவரது இரண்டாவது ஆண்டு நினைவை முன்னிட்டு ‘ஓர் ஒப்பனை இல்லாத முகம்’ என்ற நூலைதொகுத்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.கே.காசிலிங்கம்.
இதனை பூபாலசிங்கம் புத்தகசாலையினர் வெளியிட்டுள்ளனர்.
‘ஓர் ஒப்பனை இல்லாத முகம்’ முதலாவது நூல் ஆசிரியர் எஸ்.கே.காசிலிங்கம் அவர்கள் கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலையில் வைத்து, கடந்த மார்ச் 15ம்திகதி அன்று ஏ.ரகுநாதனின் மூத்த புதல்வி வைத்தியக்கலாநிதி நிர்மலா ரகுநாதன் அவர்கள் கரங்களில் வழங்கியிருந்தார்.
தொடர்ந்து ஏப்ரில் 24ம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்க வினோதன் மண்டபத்தில்‘ஓர் ஒப்பனை இல்லாத முகம்’ அறிமுகவிழா நடைபெற்றது.
இந்த நூலின் லண்டனுக்கான அறிமுகவிழா 30.04.2022 சனிக்கிழமை மாலை4மணிக்கு ஈலிங் சிறி கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நாடகர்-ஏடகர்-ஊடகர் ஏ.சி.தாசீசியஸ் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
பரிஸிற்கான அறிமுகவிழா 08.05.2022 ஞாயிற்றுக்கிழமை ஸ்காவ் நுண்கலைக்கூடத்தில் நடைபெறவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா
