லொக்டவுனில்'பிறந்தநாள் விருந்து' சிக்கலில் பிரதமர் பொறிஸ் ஜோன்ஸன்
Boris Johnson
lockdown
uk
birthday party
By Sumithiran
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வேளை பிறந்தநாள் விருந்தை நடத்தியதற்காக பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
பிறந்தநாள் விருந்து கடந்த ஜூன் 19, 2020 அன்று நடைபெற்றதாக ஐடிவி செய்திசேவை தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலக அமைச்சரவை கூட்ட அறையில் இந்த விருந்து நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் லண்டன் மாநகர காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் செயல் என பிரிட்டனில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
