விமர்சனங்களுக்கு பிரித்தானியப் பிரதமர் பதிலடி

Boris Johnson United Kingdom Motion of no confidence
By Vanan Jun 08, 2022 08:29 PM GMT
Report

பிரித்தானியப் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், தாம் பிரதமர் பொறுப்புக்கான பணிகளை தொடர்வதில் உறுதியுடன் உள்ளதாக பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை தொடர்ந்து இன்று முதல் முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.

பொறிஸ் ஜோன்சன் தொடர்பில் கடுமையான விமர்சனம்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது கருத்து வெளியிட்ட தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டேம் ஏஞ்சலா ஈகிள், பொறிஸ் ஜோன்சன் தொடர்பில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

விமர்சனங்களுக்கு பிரித்தானியப் பிரதமர் பதிலடி | Boris Johnson Vows To Get On With Being Pm

பொறிஸ் ஜோன்சன், அவரது சொந்தக் கட்சி உறுப்பினர்களாலேயே எந்த அளவிற்கு வெறுக்கப்படுகின்றார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கட்டாயம் பதவி விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தற்போது பிரித்தானிய மக்கள் எதிர்நோக்கும் சவால்கள், கென்சவேட்டிவ் கட்சியின் உட்கட்சி பிளவுகளால் திசைதிருப்படுவதாகவும் பின்வரிசை உறுப்பினர்கள் 148 பேர் பொறிஸ் ஜோன்சனை நம்பவில்லை என்றால், ஏன் நாடு நம்ப வேண்டும் எனவும் டேம் ஏஞ்சலா ஈகிள் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் இதற்கு பதில் அளித்த பொறிஸ் ஜோன்சன், தனது அரசியல் வாழ்க்கை தற்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தமது அரசாங்கம் இதுவரை செய்யாத மிகப் பெரிய மற்றும் மிகவும் குறிப்பிடத்தக்க விடயங்களை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

விமர்சனங்களுக்கு பிரித்தானியப் பிரதமர் பதிலடி | Boris Johnson Vows To Get On With Being Pm

தொழிற்கட்சியின் தலைவர் சேர் கெய்ர் ஸ்ராமர் மற்றும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பிரித்தானிய நாடாளுமன்ற தலைவர் இயன் பிளாக்ஃபோர்ட் ஆகியோரும் பொறிஸ் ஜோன்சன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

பொறிஸ் ஜோன்சன் மீதான நம்பிக்கையீனம்

நேற்று முன்தினம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 10 இல் நான்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறிஸ் ஜோன்சன் மீதான நம்பிக்கையீனத்தை வெளியிட்டிருந்தனர்.

பொதுமுடக்க காலத்தில் விதிகளை மீறி விருந்துபசாரங்களை நடத்தியமை தொடர்பில் அபராதம் பெற்றிருந்த பொறிஸ் ஜோன்சன் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.

இதனிடையே வரிகளை குறைக்குமாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறிஸ் ஜோன்சனுக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றனர்.

விமர்சனங்களுக்கு பிரித்தானியப் பிரதமர் பதிலடி | Boris Johnson Vows To Get On With Being Pm

இதன்மூலம் கென்சவேட்டிவ் கட்சியில் மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்பதுடன், அதிகரித்துவரும் வாழ்க்கை செலவை மக்கள் சமாளிப்பதற்கு உதவும் எனவும் பிரதமருக்கு ஆதரவான உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்