கோர விபத்தில் 21 வயது இளைஞர் பலி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
Death
By Thulsi
கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உயிரிழந்தார்.
களுத்துறை வடக்கு காவல் பிரிவிற்குட்பட்ட நாகசந்தி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அத்துடன் பின்னால் அமர்ந்து பயணித்தவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையில் கைது
இவ்வாறு உயிரிழந்தவர் களுத்துறை வடக்கு, சமகிபுர வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞராவார்.

குறித்த இளைஞர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பாணந்துறையில் இருந்து களுத்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, நாகசந்தி பகுதியில் வலதுபுறமாக உள்ள வீதிக்குத் திரும்ப முற்பட்டுள்ளார்.
இதன்போது முன்னால் வந்த காரில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் காரின் சாரதி களுத்துறை வடக்கு காவல்துறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி