ரயிலில் செல்பி எடுக்க முயன்று ஆபத்தான நிலையில் சிறுவன்
Sri Lanka Police
Accident
By Sumithiran
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி விஷேட ரயிலில் பயணம் செய்த 15 வயது சிறுவன் ஒஹியா மற்றும் இடல்கஸ்ஹின்ன பகுதிகளுக்கு இடையில் கடந்த 22ஆம் திகதி மாலை ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தஸ்குவேல் ஆராச்சியைச் சேர்ந்த கிஹான் என்ற 15 வயது சிறுவனே விபத்தில் சிக்கியுள்ளார்.
காயமடைந்த சிறுவனை
காயமடைந்த சிறுவனை அதே ரயிலில் ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று 1990 சுவசார்யா அம்புலன்ஸ் வாகனத்தில் தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி