பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த இளைஞன் மீது வாள்வெட்டு..! யாழில் சம்பவம்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kiruththikan
வாள்வெட்டு
பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
யாழ்ப்பாணம் , உடுவில் பிரதேச செயலகத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் காத்திருந்த இளைஞன் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் இணுவில் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி
சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி