உயிருக்கு போராடிய சிறுவன் - தாக்கி வெளியே அனுப்பிய வைத்தியர்
Colombo
Sri Lanka
By Kiruththikan
தென்னிலங்கையில் உள்ள அரசாங்க வைத்தியசாலையொன்றிற்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சையளிக்க வைத்தியர் மறுத்த காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இதன்போது குறித்த வைத்தியர் சிறுவனையும், தந்தையையும் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளதுடன், தாக்கி வெளியில் தள்ளியுள்ளார்.
இந்த வைத்தியரின் இரக்கமற்ற செயலுக்கு கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதேவேளை, பலரும் குறித்த வைத்தியரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், சுகாதார அமைச்சு இந்த வைத்தியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்கள் ஊடாக பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி