சென்னை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வை புறக்கணிக்க கோரிக்கை
2009 இல் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தேறி மூன்று வருடங்கள் கழித்து, 2012 நவம்பர் மாதத்தில் உலக தமிழர் மாநாட்டினை நடாத்தியது தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழு. அந்தக் குழுவின் தலைமைத்துவத்தை அப்போது வகித்தது பிரித்தானிய தமிழர் பேரவை. இந்த மாநாட்டிற்கு இலங்கை, இந்தியா என பல நாடுகளில் இருந்தும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், செயற்பாட்டளார்கள் அழைக்கப்பட்டு இருந்தார்கள்.
இலண்டன் வெஸ்ட்மினிஸ்டரில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த மாநாடு இனப்படுகொலை மாநாடு என்ற தொனிப்பொருளை கொண்டிருந்தது. மக்களின் உரிமைகளுக்காக போராடும் தரப்புகளையும், மக்களின் உரிமைகளை மறுக்கும்/பறிக்கும் தரப்புகளையும் ஒரே மேடையில் ஏற்றிய மடமைத் தனத்தை நிகழ்த்தியது பிரித்தானிய தமிழர் பேரவை.
அதாவது கொல்லப்பட்டவர்களையும், கொல்லுபவர்களையும் ஒரே மேடையில் ஏற்றி கொலைக்கு நீதி கோரும் கொடுமை இது. இந்த நிகழ்வில் பிரித்தானியா பழமைவாத கட்சியினர், மு.க.ஸ்டாலின், தொல்.திருமாவளவன் உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் பங்குபற்றி இருந்தனர்.
பிஜேபி, அர்ஜுன சம்பத் என மதவாத சக்திகளும் அழைக்கப்பட்டதன் பேரில் கலந்து கொண்டனர்.
தமிழ் சொலிடாரிட்டி க்கும் பிரித்தானிய தமிழர் பேரவையால் அழைப்பு விடுக்கப்பட்டது. ஒடுக்குமுறை சக்திகளோடு நாம் கை கோர்க்க மாட்டோம் என மக்கள் முன்னால் எமது மறுப்பறிக்கையை முன்வைத்து அந்த மாநாட்டை புறக்கணித்தது தமிழ் சொலிடாரிட்டி மட்டும் தான். அன்று நாம் வெளியிட்ட அறிக்கையை இந்த தொடுப்பில் வாசிக்கலாம். https://www.tamilsolidarity.org/tamil-solidarity-declined-to-participate-the-london-conference/
"இது ராஜதந்திர அரசியல். தமிழர்களுக்கு நீதி கிடப்பதை இவர்கள் குழப்புகிறார்கள். இனப்படுகொலை மாநாட்டினை தடுக்க முற்படும், தமிழர் விரோத சக்திகள் இவர்கள்" என தமிழ் சொலிடாரிட்டி இயக்கம் மீது விசம தாக்குதல்களை நிகழ்த்தியது பிரித்தனியா தமிழர் பேரவையும் அதன் ஆதரவாளர்களும். நாம் எமது அரசியல் நிலைப்பட்டை முன்வைப்பதற்கும், அதனை மக்கள் மத்தியில் பிரசாரப்படுத்துவதற்கும் ஒரு போதும் தயங்கியதில்லை.
தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு, கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் ஏற்பாடு செய்திருக்கும் 2022 மாநாட்டில் சாதிய, மதவாத கட்சியினரும் பேச்சாளர்களாக உள்வாங்கப்பட்டு இருக்கிறார்கள்.
"இந்து தமிழீழம்" அமைப்போம் என்ற நிலைப்பாடு கொண்டவர்கள் அதனை ஆதரிப்பவர்கள் மக்கள் விரோத சக்திகளே. அவர்களின் கடந்த கால நிலைப்பாடு எதுவாக இருப்பினும் சாதி, மத அடிப்படையில் பிரிவினைவாத அரசியலை முன்னெடுப்போர் மக்கள் மத்தியில் புறக்கணிக்கப்பட வேண்டிய சக்திகளே.
கவிஞர் காசி ஆனந்தன் இதற்கு ஒன்றும் விதி விலக்கு அல்ல. இந்த மாநாட்டை ஒடுக்கப்படும் மக்கள் நிற்கும் சக்திகள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.
இதுவரை இந்த மாநாட்டில் பேச்சாளர்களாக கலந்து கொள்ள இருந்த மே 17 இயக்கம், திராவிடர் விடுதலை கழகம் மற்றும் இளந்தமிழகம் ஆகிய அமைப்புகள் மாநாட்டில் இருந்து விலகுவதாக அறிவித்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி உள்ளனர். இதனை தமிழ் சொலிடாரட்டி வரவேற்கிறது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
