14 வயது மாணவியை சீரழித்த காதலனுக்கு வலைவீச்சு
பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் 14 வயது 09 மாதம் நிரம்பிய சிறுமியை தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த காதலனை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சிறுமியின் காதலன், மொனராகலை நகருக்கு வருமாறு அவருக்கு அறிவித்துள்ளார். அதன்படி, கடந்த 2023-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26-ம் திகதி அந்த சிறுமியும் பயிற்சி வகுப்புக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறினார்.
ஹோட்டலுக்கு அழைத்து சென்ற காதலன்
சிறுமியை முச்சக்கர வண்டியில் ஏற்றி மொனராகலை மஹாநாம வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்ற காதலன் அங்கு சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கியுள்ளார். இதன்போது சிறுமி சத்தமாக அழத் தொடங்கியதால், மொனராகலை நகருக்கு அழைத்து வந்து விட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் தாயார் முறைப்பாடு
சம்பவம் தொடர்பில் சிறுமி தனது தாயிடம் கூறியதை அடுத்து, மொனராகலை காவல் நிலையத்தில் தாயார் முறைப்பாடு செய்துள்ளார். சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மொனராகலை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
