யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சிறுமியின் உயிரிழப்பு
Jaffna
Jaffna Teaching Hospital
By Vanan
மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.
யாழ். புத்துாா் கிழக்கு - ஊறணி பகுதியைச் சோ்ந்த அஜிந்தன் லக்ஸ்மிதா (வயது4) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மூளைக் காய்ச்சல்

இவர், கடந்த சிவராத்திாி தினத்தன்று திடீரென வாந்தி எடுத்து சுகயீனமடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிாிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
இருப்பினும் நேற்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா்.
மரண விசாரணைகளின் பின்னா் சிறுமியின் சடலம் பெற்றோாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் மரணம் ஊறணி பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மரண அறிவித்தல்