இலங்கையை உலுக்கிய கோர விபத்து: களத்தில் முக்கிய ஆய்வு
எல்ல-வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்காக காரணத்தை கண்டறிய ஆய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த பேருந்து விபத்து தொடர்பான விசாரணைக்குப் பொறுப்பான அரச பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரி இந்த ஆய்வு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளார்.
இது தொடர்பிலான ஆய்வு நடவடிக்கை நாளை (08) எல்ல பகுதியில் இடம்பெறவுள்ளது.
அதிகமான வேகம்
விபத்து நடந்த நேரத்தில் பேருந்து மணிக்கு 70 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் பயணித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் பேருந்து தடுப்பு தொகுதி (பிரேக்) இயங்காததால் பேருந்து அதிக வேகத்தில் பயணித்திருக்கலாம் என காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சான்றிதழ்
அத்தோடு, பேருந்து இயங்கும் நிலையில் உள்ளதாகக் கூறும் தகுதிச் சான்றிதழும் பேருந்தில் காணப்பட்டுள்ளது.
அந்த தகுதிச் சான்றிதழ் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட பேருந்தின் சிதைவுகள் தற்போது எல்ல காவல் நிலையத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
