அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டோம் : ட்ரம்பிற்கு பிரேசில் ஜனாதிபதி பதிலடி
அமெரிக்கா (us)பிரேசில்(brazil) மீது விதிக்கும் எந்தவொரு வரிகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (Luiz Inácio Lula da Silva)கூறியுள்ளார்.
முன்னதாக, உலக நாடுகளுக்கு வரி விதிப்பு மூலம் ட்ரம்ப்(donald trump) அச்சுறுத்திய நிலையில், தற்போது பிரேசிலை குறிவைத்துள்ளார். ஓகஸ்ட் 1 முதல் வரி விதிக்கப்படும் என்று டட்ரம்ப் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டோம்
ட்ரம்பின் மிரட்டலுக்கு லூலா பதிலளித்தபோது, "பிரேசில் ஒரு இறையாண்மை கொண்ட நாடு. அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டோம். ஆட்சி கவிழ்ப்பைத் திட்டமிட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பிரேசிலின் சட்ட வரம்புக்குள் மட்டுமே வரும்.
உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பிரேசில் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவுடன் $410 பில்லியன் வர்த்தகம் செய்துள்ளோம். இந்த வரி விதிப்பை பிரேசிலின் பொருளாதார சட்டங்களின்படி எதிர்கொள்வோம்," என்று தனது 'எக்ஸ்' தளத்தில் உறுதியாகப் பதிலளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
