கனடாவில் பாரியளவில் அதிகரிக்கும் நோய் தாக்கம்: ஆய்வில் வெளியான முக்கிய தகவல்
கனாடவில் 20 - 40 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் மார்பகப் புற்று நோய் அதிகரித்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த ஆய்வை கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது.
பெரும் அதிகரிப்பு
அதன்படி, இந்த ஆய்வு தொடர்பான விபரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், 1984 - 1988 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியை 2015 - 2019 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இளம் வயது மார்பகப் புற்று நோயாளர் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பரிசோதனைகள்
அத்துடன், 20 தொடக்கம் 30 வயதுடைய பெண்கள் மத்தியில் மார்பகப் புற்று நோய் தொடர்பான பரிசோதனைகள் குறைந்தளவு மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இள வயதிலேயே புற்று நோயாளர்களை அடையாளம் காணும் முறையிலான பரிசோதனைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |