இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் அதிரடியாக கைது
Sri Lanka Police
Bribery Commission Sri Lanka
Sri Lanka Police Investigation
By Jaso
ரூபா10,000 இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் உப காவல்துறை பரிசோதகர் மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று நாரம்மல பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
நாரம்மல பிரதேசத்தில் உள்ள நபரொருவரின் முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மதுபான வியாபாரியிடம் இலஞ்சம்
நாரம்மலையில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் நபரிடம் உப காவல்துறை பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் இலஞ்சம் கோரியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க மாட்டோம்
சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உறுதியளித்தமைக்காக இந்த இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குருநாகல் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி