விமானத்தின் கழிப்பறைக்குள் சிக்கிய பயணியால் பரபரப்பு
இந்தியாவில் மும்பையிலிருந்து பெங்களூருக்குப் பயணம் செய்த பயணி ஒருவர் விமானத்தின் கழிப்பறையில் மாட்டிக்கொண்டமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை விமானம் பெங்களூரில் தரையிறங்கிய பிறகு அவர் மீட்கப்பட்டார்.
ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) விமானத்தில் அந்தச் சம்பவம் நடந்தது. அந்தக் கழிப்பறையின் கதவு திடீரெனப் பழுதானதால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர் உள்ளே சிக்கிக்கொண்டார்.
விமானம் பெங்களூரில் தரையிறங்கிய பிறகே
விமானம் பெங்களூரில் தரையிறங்கிய பிறகே அவர் கழிப்பறையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டார். அவருக்கு உடனடியாகச் சிகிச்சை வழங்கப்பட்டது.நடந்த சம்பவத்துக்காக விமான நிறுவனம் பயணியிடம் மன்னிப்புக் கேட்டது.
"பயணம் முழுவதும், எங்கள் குழுவினர் பயணிக்கு உதவி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர். விமானம் தரையிறங்கியவுடன், ஒரு பொறியாளர் கழிவறை கதவைத் திறந்தார், பயணி உடனடி மருத்துவ உதவியைப் பெற்றார்," என்று ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறினார்.
அதிர்ச்சியில் இருந்து மீளாத பயணி
விமான நிறுவனம் அவருக்கு முழு உதவியையும் வழங்கும் என்று கூறினார். பயணியின் கூடுதல் விவரங்களைப் பகிர்ந்து கொள்ள விமான நிறுவனம் மறுத்துவிட்டது, ஆனால் அந்த நபர் "அதிர்ச்சியில்" இருப்பதாக ஒரு செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |