பெரும் போகப் பயிர்ச் சேதங்களுக்கு இழப்பீடு...! விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்
2025/2026 பெரும்போகப் பயிர்ச்செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், மாவட்டங்களில் சேத மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்புறுதிச் சபை
காப்புறுதிச் சபை அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள மாவட்ட அலுவலகங்களுடன் இணைக்கப்பட்ட கள உத்தியோகத்தர்கள், சேதத்தின் அளவை மதிப்பிடும் பணிகளைத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது பொலன்னறுவை, பதுளை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் இந்த மதிப்பீடுகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சபை தெரிவித்துள்ளது.
சேத மதிப்பீட்டுச் செயல்முறை முடிவடைந்ததும் விவசாய அபிவிருத்தி திணைக்களத்திடம் இருந்து பரிந்துரைகள் பெறப்படும் என்றும் அதன் பின்னர் ஏற்பட்ட உண்மையான சேதத்தின் அடிப்படையில் உரிய இழப்பீடு உடனடியாக வழங்கப்படும் என்றும் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |