ரஷ்யாவுக்கு பேரிடி! உக்ரைனுக்கான ஆதரவை சீரமைக்க தொடங்கிய அமெரிக்கா
உக்ரைனுக்கான பாதுகாப்பு உதவிக் குழுவை (SAG-U) மறுசீரமைத்து, அதன் பொறுப்புகளை நேட்டோவின் உக்ரைனுக்கான பாதுகாப்பு உதவி மற்றும் பயிற்சி அமைப்புடன் (NSATU) இணைக்கப்போவதாக அமெரிக்க ஐரோப்பிய கட்டளைப் பிரிவு (USEUCOM) அறிவித்துள்ளது.
இந்த மறுசீரமைப்பு உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு உதவியின் செயல்திறனை அதிகரிப்பது, முக்கியப் பணிகளின் தலைமைப் பொறுப்பை நட்பு நாடுகளிடம் ஒப்படைப்பது மற்றும் பிற உலகளாவிய முன்னுரிமைகளுக்காக அமெரிக்க வளங்களை விடுவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
உக்ரைனில் நீடித்த அமைதி
உக்ரைனின் பாதுகாப்பில் நட்பு நாடுகள் தலைமைத் தாங்க முடியும் என்பதை நிரூபித்துள்ளதாகத் தெரிவித்த USEUCOM தளபதி ஜெனரல் அலெக்சஸ் ஜி. கிரின்கேவிச், SAG-U எப்போதுமே ஒரு தற்காலிக அமைப்பாகவே திட்டமிடப்பட்டது என்றும், இந்த மாற்றம் உக்ரைனில் நீடித்த அமைதியை ஏற்படுத்த உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Image Credit: Vox
ரஷ்யாவின் போருக்கு எதிர்ப்ப தெரிவித்து வரும் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் கடந்த ஆண்டில் ஐரோப்பிய நாடுகளின் பங்கு கணிசமாக விரிவடைந்துள்ளது.
2022 நவம்பர் 4 அன்று தொடங்கப்பட்ட SAG-U அமைப்பு, இதுவரை 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளை வழங்கி, பயிற்சி மற்றும் இராணுவ உபகரணங்களை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |