அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை: ஈரான் திட்டவட்டம்
அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், எந்தவொரு சந்திப்புக்கும் திட்டமிடப்படவில்லை என்றும் ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதன்மூலம், அன்று பிற்பகல் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று கூறியதை நியாயமாகக் காட்டி தாக்குதல்களை இரத்து செய்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு ஈரான் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரம்பின் மேற்படி கருத்தை ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி நிராகரித்துள்ளது.
எந்த சந்திப்புகளும் திட்டமிடப்படவில்லை
இதன்படி அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், எந்த சந்திப்புகளும் திட்டமிடப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈராக்கில் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியைத் தவிர, மற்ற அனைத்து ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களும் தற்போது நாட்டில்தான் உள்ளனர் என்று பாகாயி மேலும் கூறியுள்ளார்.
மேலும் ஹோர்முஸ் நீரிணையின் மேலாண்மை குறித்து ஓமானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |