ட்ரம்பின் பேச்சுவார்த்தை விவாதத்துக்கு மத்தியில் பாகிஸ்தானுடனான ஈரானின் இராஜதந்திர நகர்வு
மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை தொடரும் நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர்களுடனும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீருடனும் தனித்தனியாக தொலைபேசி பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பேச்சுவார்த்தையின்போது, மத்திய கிழக்கின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக, சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எச்சரித்தார் அப்பாஸ் அராக்சி
இதில் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக எந்தவொரு தாக்குதல் அல்லது விரோத நடவடிக்கையிலும் ஈடுபட்டால், அதற்கு ஈரான் உறுதியான மற்றும் சமமான பதிலடி வழங்கும் என அப்பாஸ் அராக்சி எச்சரித்திருந்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

முன்னதாக, அமெரிக்கா அல்லது இஸ்ரேல் எந்தவொரு தாக்குதல் அல்லது விரோத நடவடிக்கையிலும் ஈடுபட்டால், அதற்கு ஈரான் உறுதியான மற்றும் சமமான பதிலடி வழங்கும் என சவுதி வெளியுறவு அமைச்சரிடம் அராக்சி எச்சரித்திருந்தார்.
அதேபோல், துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹகான் ஃபிடான் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசிம் முனீருடனும் தனித்தனியாக பேசிய அவர், அமெரிக்காவின் எந்தவொரு "சாகச நடவடிக்கைக்கும்" ஈரான் தக்க பதிலடி வழங்கும் என்று கூறி இருந்தார்.
மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஈரான் தனது இராஜதந்திர தொடர்புகளை தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |