நாமல் வழக்கில் வாய் விட்டு மாட்டிய சட்டத்தரணி அலி சப்ரி: வெடித்த புதிய சர்ச்சை

Ali Sabry Namal Rajapaksa Rajapaksa Family
By Thulsi Oct 29, 2026 05:22 AM GMT
Report

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராசபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வெளியிட்ட கருத்து தொடர்பில் இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றில் கேள்வி எழுப்பியுள்ளது

"இன்று அடக்குமுறையாளர்களாக செயற்படுபவர்கள் நாளை பாதிக்கப்பட்டவர்களாக மாறக்கூடும்" என அலி சப்ரி தெரிவித்திருந்தார்.

இந்த கூற்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவையா, அதன் விசாரணை அதிகாரிகளையா அல்லது வழக்கில் சாட்சியமளிப்பவர்களையா இலக்கு வைத்து கூறப்பட்டது என ஆணைக்குழு சார்பில் முன்னிலையான சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் தனுஜா பண்டார மன்றில் கேள்வி எழுப்பினார்.

முதல்வர் விஜய்யிடம் பறந்த கோரிக்கை: சென்​னை​யில் பள்ளிவாசல்கள்​ மீது நடந்த தாக்குதல் பின்னணி​

முதல்வர் விஜய்யிடம் பறந்த கோரிக்கை: சென்​னை​யில் பள்ளிவாசல்கள்​ மீது நடந்த தாக்குதல் பின்னணி​

பாதிக்கப்படக்கூடிய நபர்கள்

நாமல் ராசபக்ச மற்றும் மற்றைய சந்தேகநபரான ஜானகி சிறிவர்தன ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னரே, அச்சுறுத்தல் பயமின்றி உண்மையைக் கூற இரண்டு சாட்சிகள் முன்வந்ததாக ஆணைக்குழு மன்றில் சுட்டிக்காட்டியது.

நாமல் வழக்கில் வாய் விட்டு மாட்டிய சட்டத்தரணி அலி சப்ரி: வெடித்த புதிய சர்ச்சை | Bribery Commission Questions Ali Sabry S Remarks

இந்த நிலையில், அலி சப்ரி குறிப்பிட்ட "பாதிக்கப்படக்கூடிய நபர்கள்" இந்த சாட்சிகளா என்றும் ஆணைக்குழு வினவியது.

எனினும்,தனது கூற்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அலி சப்ரி, ஜனாதிபதியின் அண்மைய உரைகளைக் குறிப்பிட்டுப் பதிலளித்தார்.

மேலும், அரசியலமைப்பின் 13(5) பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே என்றும், நீதித்துறையும் ஆணைக்குழுவும் சுயாதீனமானவை என்றும் சுட்டிக்காட்டினார்.

தாய் கண்டித்ததால் வீட்டிலிருந்து ஓடிய சிறுவன்: மீண்டும் தாயிடம் ஒப்படைத்த தொடருந்துநிலைய அதிகாரிகள்

தாய் கண்டித்ததால் வீட்டிலிருந்து ஓடிய சிறுவன்: மீண்டும் தாயிடம் ஒப்படைத்த தொடருந்துநிலைய அதிகாரிகள்

இதய அறுவை சிகிச்சை

நாமல் ராஜபக்ஷவின் தாயாருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளதையும், பெற்றோர் இருவரினதும் உடல்நலக் குறைவையும் விசேட காரணியாக முன்வைத்து பிணை கோரப்பட்டது.

நாமல் வழக்கில் வாய் விட்டு மாட்டிய சட்டத்தரணி அலி சப்ரி: வெடித்த புதிய சர்ச்சை | Bribery Commission Questions Ali Sabry S Remarks

இருப்பினும், சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனக் கூறி ஆணைக்குழு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.

இரண்டு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம, நாமல் ராஜபக்ஷவின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு நவம்பர் 3 ஆம் திகதி வழங்கப்படும் என அறிவித்தார். 

வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சலுகைகள் : அநுரவின் முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சலுகைகள் : அநுரவின் முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி