விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ள புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்

Dr Wijeyadasa Rajapakshe Sri Lanka
By Beulah Sep 11, 2023 12:57 AM GMT
Report

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சுயாதீனமாக இல்லை என மக்கள் மத்தியில் கருத்தாடல் ஒன்று இருந்து வருவதாக நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.எம்.எவ் நிபந்தனைக்கேற்பவே ஊழல் எதிர்ப்பு சட்டம் - சஜித் குற்றச்சாட்டு

ஐ.எம்.எவ் நிபந்தனைக்கேற்பவே ஊழல் எதிர்ப்பு சட்டம் - சஜித் குற்றச்சாட்டு

“15ஆம் திகதியில் இருந்து புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் செயல்வலுப்பெற்ற பின்னர், அரசியலமைப்பு சபையின் அனுமதிக்கமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும்.

பூரண அதிகாரம்

தற்போதுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏதாவது பிழையான தீர்மானங்களை வழங்கி இருந்தால் அது தொடர்பாக தேடிப்பார்க்கும் பூரண அதிகாரம் புதிய ஆணைக்குழுவுக்கு இருக்கிறது.

விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ள புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் | Bribery Or Corruption Commission Wijieyadasa Sl

அதற்கான நியாயமான காரணங்கள் இருக்கின்றன. 1094இல் ஏற்படுத்தப்பட்ட தற்போதைய இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு 29 வருடங்களாக செயற்பட்டு வந்துள்ளது.

ஆனால் இலஞ்சம், ஊழல் இந்நாட்டில் இருந்து அகற்றப்படவில்லை. அதனால் புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் ஒன்றை அனுமதித்துக்கொள்ள நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.

புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படும்.

அது தொடர்பான வர்த்தாமானி அறிவிப்பு இந்த வாரம் வெளிவரும்.

தனியார் துறையின் ஊழல்

அத்துடன் இதுவரை இலஞ்ச, ஊழல் சட்டம் செயற்படுத்தப்பட்டது அரச துறைக்கும் அரசியல்வாதிகளுக்கும் மாத்திரமாகும். என்றாலும், புதிய சட்டத்தின் மூலம் தனியார் துறையின் ஊழல் தொடர்பாக விசாரணை செய்ய முடியும்.

விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ள புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் | Bribery Or Corruption Commission Wijieyadasa Sl

பாலியல் இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யவும் முடியுமாகிறது.

சட்டவிராரோதமான முறையில் சம்பாதித்துக்கொண்ட சொத்துக்களை வெளிநாடுகளில் வைப்பிலிட்டிருந்தால் அவற்றை மீள கையகப்படுத்தும் அதிகாரம் இந்த சட்டத்தின் கீழ் இருக்கிறது.

பொது மக்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் ஒத்துழைப்பு 

அதற்காக உலக வங்கியினால் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் காரியாலயத்துக்கு தேவையான அதிகாரங்களை வழங்கி இருக்கிறோம்.

விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ள புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் | Bribery Or Corruption Commission Wijieyadasa Sl

மேலும் இலஞ்சம் அல்லது ஊழலை அகற்றுவதற்கு சட்டம் மட்டும் போதுமானதாக இல்லை.

பொது மக்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். இந்நாட்டில் இருந்து ஊழலை இல்லாமலாக்கினால் சில அரசியல் கட்சிகளின் இருப்பு இல்லாமல் போகும்.

தற்போதுள்ள இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்திறமை இன்மையால் அனைத்து அரசியல்வாதிகளும் விமர்சிக்கப்பட்டார்கள்.

தற்போதுள்ள இலஞ்ச ஆணைக்குழு எந்த விடயத்தை செய்தாலும் அதற்கு வழங்கி இருக்கும் சுயாதீனத்தன்மை காரணமாக அதன் நடவடிக்கைகளை தேடிப்பார்க்க முடியாது.

என்றாலும் புதிய சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளின் செயற்திறமை தொடர்பாக 4மாதங்களுக்கு ஒரு தடவை நாடாளுமன்றத்துக்கு அறிக்கையிட வேண்டும்.

அத்துடன் தற்போதுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏதாவது தவறான தீர்மானம் அல்லது தீர்ப்பு வழங்கி இருந்தால் அல்லது பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வழக்கு விசாரணைகளை வாபஸ் பெற்றுக்கொண்டிருந்தால் அது தொடர்பக தேடிப்பார்க்கும் பூரண அதிகாரம் புதிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இருக்கிறது.

இந்த மாதம் 15ஆம் திகதியில் இருந்து புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் செயல்வலுப்பெற்ற பின்னர், அரசியலமைப்பு சபையின் அனுமதிக்கமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய ஆணையாளர்கள் பணிப்பாளர் நாயகம் அதிபரினால், நியமிக்கப்படுவதுடன் அவர்களை இணைத்துக்கொள்வதற்கான தீர்மானத்தை அரசியலமைப்புச் சபை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025