பிரித்தானியாவின் ஆசிய பணக்காரர்கள் பட்டியல் : 2022 - சுனக்கை மிஞ்சி முதலிடம் பிடித்த இந்தியர்
பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் 2022ஆம் ஆண்டுக்கான, பிரித்தானியாவின் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
அவர்களுடைய சொத்து மதிப்பு 790 மில்லியன் பவுண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஹிந்துஜா குழுமம்
2022ஆம் ஆண்டுக்கான, பிரித்தானியாவின் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ஹிந்துஜா குழுமம் முதலிடம் பிடித்துள்ளது.
ஹிந்துஜா குழுமம் 17 துறைகளில் வெற்றிகரமாக செயற்படும் உலகளாவிய பல்தேசிய நிறுவனம் ஆகும். அதன் நிறுவனர் பரமானந்த் தீப்சந்த் ஹிந்துஜா என்னும் இந்தியர் ஆவார்.

ஹிந்துஜா குழுமத்தின் சொத்து மதிப்பு 30.5 பில்லியன் பவுண்டுகள் ஆகும்.
இந்த ஆண்டுக்கான பிரித்தானியாவின் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில், பிரித்தானியாவில் வாழும் 16 செல்வந்தர்கள் இடம்பிடித்துள்ளார்கள்.
இப்பட்டியலில், லக்ஷ்மி மிட்டல் (சொத்து மதிப்பு 12.8 பில்லியன் பவுண்டுகள்), Sri Prakash Lohia மற்றும் குடும்பத்தினர் (சொத்து மதிப்பு 8.8 பில்லியன் பவுண்டுகள்), Nirmal Sethia (6.5 பில்லியன் பவுண்டுகள்) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.