பிரித்தானியாவில் இருந்து மகளின் பிறந்த நாளை கொண்டாட வந்த தந்தை மர்ம மரணம்
தனது மகளின் 34வது பிறந்த நாளை கொண்டாட இலங்கைக்கு வந்த பிரித்தானிய பிரஜையொருவர் எல்ல பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், பிரித்தானியாவின் ஓக்பாத்தைச் சேர்ந்த பிரட் மக்லீன் (63) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் தனது மகள் நடாலி அன்னேவுடன் ஒக்டோபர் 16 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்து முதலில் மாத்தறை மாவட்டத்தில் உள்ள வெலிகமவுக்குச் சென்று, ஒக்டோபர் 23 ஆம் திகதி எல்லவுக்குச் சென்றுள்ளார்.
உயிரிழப்பு
பின்னர் அங்குள்ள சுற்றுலா ஹோட்டலில் தங்கி, சனிக்கிழமை (25) தந்தையும் மகளும் எல்ல பாறையில் மலையேற சென்ற போது, தந்தை தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

மலை உச்சியில் இருந்த அவர் திடீரென சரிந்து விழுந்ததாகவும், பண்டாரவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
மேலதிக விசாரணை
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பண்டாரவெல நீதவான் கெமுனு சந்திரசேகர, நீதவான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சிறப்பு நீதித்துறை மருத்துவ அதிகாரியால் பிரேத பரிசோதனைக்காக உடலை பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்