உக்ரைன் மீதான ரஷ்யாவின் குற்றச்சாட்டு - பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
அணு ஆயுதங்கள் அல்லது உயிரி ஆயுதங்களை உக்ரைன் தயாரித்து வருவதாக, ரஷ்யா குற்றச்சாட்டை மன்வைத்து வருவது கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து தீவிரமடைந்துள்ளதாக, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“இது நீண்டகாலமாக சொல்லப்படும் கதைதான்” என, தெரிவித்துள்ள அந்த அமைச்சகம், “உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை நியாயப்படுத்துவதன்” ஒருபகுதியாக அவை பெரிதாக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளூர் மக்களை பாதிக்கும் வகையிலான பிரசாரப் பணிகளை மேற்கொண்டு, ரஷ்யா உளவியல் போரில் ஈடுபடுவதாக உக்ரைன் இராணுவம் முன்னதாக குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest Defence Intelligence update on the situation in Ukraine - 08 March 2022
— Ministry of Defence ?? (@DefenceHQ) March 8, 2022
Find out more about the UK government's response: https://t.co/KQnrJ3B26G
?? #StandWithUkraine ?? pic.twitter.com/BjQ8W4wGvl
