புதுவருடத்தில் பிரித்தானிய இராஜ குடும்பத்திற்கு ஏற்படவுள்ள பாரிய சிக்கல் - வெளியானது கணிப்பு!
பிரித்தானிய ராஜ குடும்பம் 2023ஆம் ஆண்டு பல பிரச்சினைகளை சந்திக்க இருப்பதாக, மகாராணியாரின் மரணத்தை துல்லியமாக கணித்த, ஆவிகளுடன் பேசும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகம் குறித்து கணித்த ஆவிகளுடன் பேசும் நபர் Craig Hamilton-Parker என்பவர் உலகில் நடக்கவிருக்கும் பல விடயங்களை முன்கூட்டியே கணித்தவர் ஆவார்.
நாடி ஜோதிடர்கள்
தனது 20 வயதில் இந்தியாவுக்குச் சென்றிருந்த Craig, அங்குள்ள நாடி ஜோதிடர்களால் ஈர்க்கப்பட்டார். அதன் பின்புதான் அவர் இவ்வாறு பின் நடக்கவிருக்கும் விடயங்களை கணிக்கத் துவங்கினார்.
அவர் துல்லியமாக கணித்த விடயங்களில், ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது, பிரெக்சிட், பிரித்தானிய மகாராணியாரின் மரணம் மற்றும் மன்னர் சார்லஸ் மீது மக்கள் முட்டைகள் எறிவது போன்ற விடயங்கள் துல்லிய கணிப்பாக கூறப்படுகிறது.
சார்லஸ் மனநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இந்நிலையில், 2023ஆம் ஆண்டில் ராஜ குடும்பத்தில் நிகழவிருக்கும் பிரச்சினைகள் குறித்து சில விடயங்களை கணித்துள்ளார். அவற்றில் முக்கியமானது, இளவரசர் ஆண்ட்ரூவுக்கு மிக மோசமான விடயம் ஒன்று நடக்கவிருப்பதாகவும் கணித்துள்ளார்.
அத்துடன், மன்னர் சார்லஸ் முடிசூடிய முதல் ஆண்டு அவருக்கு நன்றாக இருக்கும் என்றும், ஆனால், பின்னர் அவரது மன நலனில் சில பிரச்சினைகள் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
சீனாவில் வெடிக்கவுள்ள புரட்சி
மேலும், ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் விபத்தில் சிக்குவார், அது ஒருவேளை அவர் கீழே விழுவதாகக் கூட இருக்கலாம் என்றும், ராஜ குடும்பத்திலுள்ள பிள்ளைகளில் ஒருவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
ராஜ குடும்பம் குறித்து இத்தனை விடயங்களை கணித்துள்ள Craig, சீனாவில் ஒரு புரட்சி வெடிக்கும் என்று கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
