அண்ணனுக்காக பரீட்சைக்கு தோற்றிய தம்பி கைது
Sri Lanka Magistrate Court
G.C.E. (O/L) Examination
Sri Lanka Police Investigation
By Sumithiran
இன்றுடன் நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண பரீட்சையில் தனது சகோதரருக்காக பரீட்சைக்கு தோற்றிய மற்றொரு சகோதரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர் தெனியாய, பல்லேகம மகா வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் தனது சகோதரனுக்காக பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.
பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் முறைப்பாடு
பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
தெனியாய ஏனசல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரவக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெனியாய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்