இரு குழந்தைகளை கொடூரமாக சித்திரவதை செய்த இளம் தாய் கைது!
கொழும்பு களனி பகுதியில் பிள்ளைகளை சித்திரவதை செய்த குற்றசாட்டில் 26 வயதுடைய தாய் ஒருவரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
9 வயது சிறுமி மற்றும் 13 வயதுடைய மனநலம் குன்றிய சிறுவனை சித்திரவதை செய்த தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் தலைமையகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இளம் தாயின் கொடூர செயல்
களனியில் வாடகை அடிப்படையில் வீடொன்றில் தங்கியிருந்த பெண்ணை பேலியகொட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு கைதுசெய்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான தாய் வேலைக்குச் சென்று இரவு வீட்டுக்கு வரும் வரையில் இரு பிள்ளைகளை மிகவும் பாதுகாப்பற்ற அறையில் அடைத்து வைத்து குழந்தைகளை கொடூரமாக நடத்தியுள்ளார்.
பிள்ளைகளின் கல்வி, போஷாக்கு குறித்து கவனம் செலுத்தாமல் குறித்த தாய் செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
