சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மீது தாக்குதல்
Sri Lanka Police
G.C.E. (O/L) Examination
Sri Lanka Police Investigation
By Sumithiran
எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கணித கருத்தரங்கில் கலந்து கொண்ட பண்டாரவளை நகரில் உள்ள இரண்டு அரச பாடசாலை மாணவர்களை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பண்டாரவளை நகரில் உள்ள அரச பாடசாலையொன்றின் மூன்று மாணவர்கள் இன்று (22) கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் எனவும் இந்த வருடம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
கணித கருத்தரங்கு நிறைவடைந்த பின்னர்
கணித கருத்தரங்கு நிறைவடைந்த பின்னர் பண்டாரவளை நகரில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத பாதைக்கு சென்ற மாணவர்கள் இருவரையும் கைகளால் தாக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி