சிறுமி வன்புணர்வு : 12 வருடங்களுக்கு பின்னர் வழங்கப்பட்ட கடூழிய சிறை
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
Sri Lanka Police Investigation
By Sumithiran
சிறுமி ஒருவரை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 12 வருடங்களின் பின்னர் 66 வயது முதியவருக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சீராகல மேற்படி தீர்ப்பினை அளித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு
எம்பிலிப்பிட்டிய செவனகல மஹகம பிரதேசத்தை சேர்ந்த குற்றவாளிக்கு 44 வயதாக இருக்கும் போது கடந்த 2011 ஆம் ஆண்டு சிறுமியை பலமுறை வன்புணர்ந்ததாக தெரிவித்து காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இது தொடர்பில் காவல்துறையினர் எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையிலேயே 12 வருடங்களின் பின்னர் மேற்படி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
அத்துடன் சிறுமிக்கு இரண்டு இலட்சம் நட்டஈடு, அபராதமாக 25 ஆயிரம் செலுத்தவேண்டுமெனவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
"தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன்": பகிரங்கமாக மன்னிப்பு கோரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் (காணொளி)
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி