பிள்ளையார் கோவிலில் வைக்கப்பட்ட புத்தர் சிலை! சிங்களமயமாக்கப்படும் தமிழர் பகுதிகள்
முல்லைத்தீவின் வீதியோரத்தில் இருந்த பிள்ளையார் கோவிலில் தற்போது புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை பேசுபொருளாகியுள்ளது.
தமிழர் பகுதிகளில் உள்ள சைவ வழிபாட்டுத் தலங்களை சிங்கள மயமாக்கும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிள்ளையார் ஆலயத்தில் புத்தர் சிலை
புல்மோட்டை-முல்லைத்தீவு வீதிகளின் சந்திப்பில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக முல்லைத்தீவு வீதியோரத்தில் இருந்த ஆலயத்தில் பிள்ளையார் சிலை மாத்திரம் இருந்துள்ளது.
இந்த ஆலயத்தில் பொது மக்கள் வழிபட்டு வந்த நிலையில், தற்போது திடீரென குறித்த ஆலயத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
மாற்று கருத்துக்கள்
இந்த விடயம் தொடர்பில் பல்வேறு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக சமூக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
எனினும், குறித்த புத்தர் சிலை எப்போது வைக்கப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை சரியான எந்தவொரு தகவல்களும் தெரியாதுள்ளது.
அத்துடன், குறித்த விடயத்தில் அரசியல் தரப்பினரின் ஆதிக்கம் காணப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த பின்னணியில், முல்லைத்தீவு-புல்மோட்டை வீதியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பான உண்மையை அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |