வெசாக் ஒளியும் பௌத்த துறவியின் பாலியல் குற்றச்சாட்டு தீர்ப்பும்!
இலங்கைத்தீவில் இன்று மே 30 அதிகாரபூர்வ அரச வெசாக் நிகழ்வு கடக்கும் பின்னணியில் அரச தலைவர் அநுரவின் வெசாக் செய்தி உட்பட்ட வெசாக் அதிர்வுகள் வந்தன.
இலங்கையில் இப்போது பௌத்த பிக்குகளின் ஒழுக்கக்கேடுகள் குறித்த விடயங்கள் வெளிவருவதாலேயோ என்னவோ அநுரவின் வெசாக் செய்தியும் அதனை சாடைமாடையாக தொட்டு, தனிநபருக்குள் இருக்கும் அக ஆன்மீகம் முதலில் பாதுகாக்கப்பட வேண்டுமென பௌத்தம் போதிப்பதான செய்தி அதில் இருந்தது.
2026 வெசாக்கின் ஒரு நவீனத்துவமாக, சிறிலங்காவின் டயலொக் தொலைதொடர்பு நிறுவனம் அனுராதபுரத்தின் எட்டு புனித தலங்களான அட்டமஸ்தானங்களுக்கு ஒரு மெய்நிகர் (வேர்ச்சுவல்) பயணத்தை பௌத்தர்களுக்கு வழங்குகிறது.
ஆனால் அவற்றின் தலைமை பிக்குவான அட்டமஸ்தானதிபதி விளிப்பு 71 வயதான பல்லேகம ஹேமரத்னரின் பகீரிடும சிறார் பாலியல் குற்றச் சந்தேகங்கள் தான் இப்போது முக்கிய விடயம்.
எனினும் அவரைக் காப்பாற்றும் வேலையில் இப்போது பௌத்த கடும் போக்குத்தலைகளான மகிந்த, நாமல், சரத்வீரசேகர என ஒரு அரசியல் பட்டாளமே இறங்கியுள்ளது. அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் சிறிலங்காவின் பாரம்பரிய ஊடகங்களும் கமுக்கமாக உள்ளன.
இதற்கிடையே அட்டமஸ்தான தேரர் செய்த குற்றங்களைப் பார்க்காமல் அவர் நாட்டுக்கும் பௌத்த சாசனத்துக்கும் செய்த சேவைகளை தான் பார்க்க வேண்டும் என பொதுபலசேனா கலகொட அத்தே ஞானசாரர் போன்ற காவிச சகபாடிகள் குரல் கொடுக்கின்றனர்.
இதேபோல மகாநாயக்கர்களின் முடிவுகளை கேள்விக்குட்படுத்த முடியாது அவை சரியோ பிழையோ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் மகிந்த. மகிந்த இவ்வாறு சொல்ல அவரது மகனான நாமலோ பிக்குகள் அவமரியாதைக்கு உட்படுத்தப்படும் நகர்வுகள் திட்டமிட்டு இடம்பெறுவதாக எகிறுகிறார்.
இவ்வாறான விடயங்களை மையப்படுத்திவருகிறது இன்றைய செய்திவீச்சு.......
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |