பொதுமக்களுக்கு ஒரு சட்டம் பெளத்த துறவிக்கு ஒரு சட்டமா : கேள்வியெழுப்பும் பொதுமக்கள்

Tamils Trincomalee Buddhism
By Sathangani Oct 09, 2024 11:16 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

திருகோணமலையில் (Trincomalee) உழவுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உழவு இயந்திரத்தை பௌத்த பிக்கு ஒருவர் தடுத்து நிறுத்தியமை குறித்து  பொதுமக்களுக்கு ஒரு சட்டம் பெளத்த துறவிக்கு ஒரு சட்டமா என கேள்வியெழுப்பியுள்ளனர்.

திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (04) குறித்த சம்பவம் இடம்பெற்றமையால் அப்பகுதியில் பதற்ற நிலை தோன்றியது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மூவின ஒன்றிணைந்த விவசாய அமைப்புக்கள் திருகோணமலை ஊடக இல்லத்தில் இன்று (09) தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

தமிழர் தலைநகரில் பௌத்த பிக்குவின் அடாவடி: இன்னலுறும் தமிழ் மக்கள்

தமிழர் தலைநகரில் பௌத்த பிக்குவின் அடாவடி: இன்னலுறும் தமிழ் மக்கள்

உழவுப்பணியை தடுத்து நிறுத்தியவர் 

இங்கு கருத்து வெளியிட்ட அவர்கள், “திரியாய் விவசாய சம்மேளனத்திற்குட்பட்ட வளத்தாமலைப் பகுதியில் உள்ள வயல் காணியில் பெரும்போக நெற்செய்கைக்காக ஆயத்த நடவடிக்கையாக உழவுப் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

பொதுமக்களுக்கு ஒரு சட்டம் பெளத்த துறவிக்கு ஒரு சட்டமா : கேள்வியெழுப்பும் பொதுமக்கள் | Buddhist Monk Cultivates People S Lands In Trinco

இதன்போது அங்கு வருகைதந்த பெளத்த துறவி ஒருவரால் குறித்த காணியானது தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான காணி என்றும் அங்கு சட்டவிரோத முறையில் பொதுமக்கள் விவசாயத்தில் ஈடுபடுவதாக அவர் குழப்பம் விழைவித்திருந்தார்.

சப்தநாக விகாரையின் விகாராதிபதி உழவுப்பணியை தடுத்து நிறுத்தியதாகவும், தொல்லியலுக்குரிய பகுதியில் குறித்த பிக்கு உழவு செய்து வருவதாகவும் குச்சவெளி காவல் நிலையத்தில் புல்மோட்டையைச் சேர்ந்த புகாரி என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து புத்த பிக்குவினால் மேற்கொள்ளப்பட்டுவந்த உழவுப்பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொது மக்கள் இருவர் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

பலமிழக்கும் தமிழரசுக் கட்சி: விலகும் மற்றுமொரு முக்கிய உறுப்பினர்

பலமிழக்கும் தமிழரசுக் கட்சி: விலகும் மற்றுமொரு முக்கிய உறுப்பினர்


கேள்வியெழுப்பும் பொதுமக்கள்

யுத்தத்தால் இடம்பெயர்ந்து பின்னர் மீள குடியமர்ந்துள்ள தமிழ் மக்கள் தங்கள் காணியில் விவசாயம் மேற்கொள்ள வரும்போது பூஜாபூமி எனக்கூறி விடுகின்றார்கள் இல்லை.

பொதுமக்களுக்கு ஒரு சட்டம் பெளத்த துறவிக்கு ஒரு சட்டமா : கேள்வியெழுப்பும் பொதுமக்கள் | Buddhist Monk Cultivates People S Lands In Trinco

1985ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து வளத்தாமலைப் பகுதியில் உள்ள காணிகளில் திரியாய் மக்கள் காலாகாலமாக விவசாயம் மேற்கொண்டு வந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட வன்செயலின் காரணமாக திரியாய் கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்திருந்தனர்.

2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த மக்கள் மீள குடியமர்த்தப்பட்ட நிலையிலும் தங்கள் காணிகளில் விவசாயம் மேற்கொள்வதற்கு வனவள பாதுகாப்பு திணைக்களம் உட்பட அரச திணைக்களங்கள் அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு அரிசிமலை விகாரை விகாராதிபதியின் பெயரில் குச்சவெளி கமநல சேவைகள் திணைக்களத்தின்கீழ் 82 ஏக்கர் காணிகள் பதிவு செய்யப்பட்டு இன்றுவரை நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு ஒரு சட்டம் பெளத்த துறவிக்கு ஒரு சட்டமா?“ என கேள்வி எழுப்பினர்.

சங்குச் சின்னத்தில் களமிறங்கும் கூட்டணி வேட்புமனுத் தாக்கல்

சங்குச் சின்னத்தில் களமிறங்கும் கூட்டணி வேட்புமனுத் தாக்கல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Penang, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

06 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜெயந்திநகர், Rehlingen-Siersburg, Germany

09 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Aulnay-sous-Bois, France, Harrow, United Kingdom, Watford, United Kingdom

09 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, London, United Kingdom

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Montreal, Canada, Cornwall, Canada, Hamilton, Canada

22 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, Bünde, Germany

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், கந்தர்மடம்

10 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வெள்ளவத்தை

08 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna

10 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, கொழும்பு, Toronto, Canada

09 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, கோண்டாவில்

08 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம்

09 Oct, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், Bottrop, Germany

06 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, மானிப்பாய், மட்டக்குளி

05 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், London, United Kingdom

01 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சங்கானை, யாழ்ப்பாணம்

05 Oct, 2019