புனித யாத்திரை சென்ற 34 பௌத்த துறவிகளை மோதி தள்ளிய வாகனம்! தாய்லாந்தில் சோகம்
தாய்லாந்தின் முக்தஹான் மாகாணத்தில் யாத்திரையாக நடந்து சென்ற புத்த துறவிகள் குழுவின் மீது வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் 8 துறவிகள் உயிரிழந்ததோடு 18 பேர் காயமடைந்துள்ளனர்.
காலை யாத்திரையாக நடந்து சென்ற புத்த துறவிகள் குழுவின் மீதே நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உபோன் ராட்சத்தானி மாகாணத்தின் நாம் குன் மாவட்டத்திலிருந்து வந்த 34 துறவிகள், வாட் ரோய் பிரா புத்தபாத் பு மனோரோம் கோவிலில் உணவருந்திய பின்னர் டான் தான் மாவட்டத்தை நோக்கி நடைபயணம் மேற்கொண்டிருந்தனர்.
11 வயது சிறுவன்
அப்போது நா சி நுவான் கிராமம் அருகே இந்த விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

11 வயது சிறுவன் தனது தந்தையின் வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச் சென்றதாகவும், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து துறவிகள் மீது மோதியதாகவும் அந்நாட்டு காவல்துறை விசாரணைகளில் தெரிவந்துள்ளது.
சம்பவ இடத்திலேயே 5 துறவிகள் உயிரிழந்தனர் எனவும், மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்றுத் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |