பூநகரி பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மூன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபை அமர்வு இன்று காலை 10.00 மணிக்கு சபையின் தவிசாளர் சிவகுமார் சிறீரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.
2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை சபையில் தவிசாளர் முன்வைத்தார்.

வாக்கெடுப்பில் ஒரு உறுப்பினர் சுகயீனம் காரணமாக சமூகம் அளிக்காத நிலையில் 11 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 08 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
இந்த நிலையில் மேலதிக மூன்று வாக்குகளால் பூநகரி பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

20 உறுப்பினர்களைக்கொண்ட பூநகரி பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 உறுப்பினர்களையும், சுயேட்சைக்குழு 04 உறுப்பினர்களையும், சுகந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி 02 உறுப்பினர்களையும், ஈழமக்கள் ஜனநாயக் கட்சி 01 உறுப்பினரையும் கொண்டுள்ளது.
ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 11 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக சுயேட்சைக்குழு 03 உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசியக்கட்சி, சுகந்திரக்கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
