வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (18) முதல் ஆரம்பமாகின்றது.
அதன்படி, காலை 09.30 முதல்10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் மாலை 06.00வரை 2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மாலை 06.00 முதல் 06.30 வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 17 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்