வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் இன்று
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் இன்று (27.02.2025) ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, இந்த குழுநிலை விவாதம் இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளதுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வரவு செலவுத் தலைப்புகள் உட்பட நிதி அமைச்சு தொடர்பான வரவு செலவுத் தலைப்புகள் மீதான விவாதமும் நடைபெற உள்ளது.
குழுநிலை விவாதம் மார்ச் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் பிற்பகல் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குழு நிலை விவாதம்
இந்த வருடத்திற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு கடந்த 17ஆம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்படி, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 நாட்களாக இடம்பெற்று, நேற்று முன்தினம் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதுடன் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்